அமெரிக்காவில் படிப்படியாக குறையும் உயிரிழப்பு!

Default Image

அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. 

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த  வைரஸானது, நாளுக்குநாள் புதிய அறிகுறிகளுடன் பரவி வருகிற நிலையில், இதன் வீரியமும் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே தான் உள்ளது. 

இந்நிலையில், இதுவரை உலக அளவில், 4,802,028 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 316,673 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தால், அதிகமான பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்தித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில், அமெரிக்காவில், இதுவரை 1,527,664 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 90,978 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அமெரிக்காவில் நேற்று மட்டும் இந்த வைரஸால், 865 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்த வைரஸால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவது, அமெரிக்க மக்களிடம் சற்று மன நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்