ஒரு லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகள் தென் கொரியாவில் இருந்து தமிழகம் வந்தடைந்தது.!
தென் கொரியாவிடமிருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன.
கொரோனா வைரஸை கண்டறிய தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பரிசோதனை கருவி தான் பிசிஆர் கருவி. இந்த பிசிஆர் கருவிகளை 10 லட்சம் எண்ணிக்கையில் தென் கொரியாவிடம் தமிழகம் ஆர்டர் செய்திருந்தது.
அதன் படி, முதற்கட்டமாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தென் கொரியாவிடம் இருந்து தமிழகம் வந்தடைந்தது. ஆர்டர் செய்த 10 லட்சம் கருவிகளும் வாரம் வாரம் ஒரு லட்சம் கருவிகளாக தமிழகம் வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.