மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு! மகாராஷ்டிரா மாநில அரசு அறிவிப்பு.!
மகாராஷ்டிராவில் பொதுமுடக்கம் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுமுடக்கமானது வரும் மே 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இதுவரை 30,706 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 1135 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்கை தளர்த்தினால் கொரோனா மேலும் பரவும் அபாயம் இருப்பதால், தற்போது ஊரடங்கு நீட்டிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மகாஸ்டிரா மாநிலத்தில் ஊரடங்கில் தளர்வுகள் இருக்குமா அல்லது விதிமுறைகள் கடுமையாக்கப்படுமா என விரைவில் தெரியவரும்.