இந்த மாவட்டங்களில் இவ்வளவு நாள்களாக கொரோனா இல்லை.!
கடந்த 30 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், இன்று மட்டுமே 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் 93 பேர் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள்.
இதனால், தமிழகத்தில் இதுவரை 10,585 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். சென்னையில், இன்று மட்டுமே 332 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,271 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தெரிவித்தார்.
இந்நிலையில், திருப்பூரில் கடந்த 15 நாள்களாகவும், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 30 நாட்களாகவும், கோவை மாவட்டத்தில் கடந்த 13 நாள்களாகவும் , சேலம், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாகவும், நாமக்கல், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 7 நாள்களாகவும் பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.