#BREAKING :சென்னையில் கொரோனா பாதிப்பு 6000-த்தை தாண்டியது
சென்னையில் இன்று மட்டுமே 332 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று மட்டுமே 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இவர்களுள் 93 பேர் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள். இதனால், தமிழகத்தில் இதுவரை 10,585 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று மட்டுமே 332 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6271 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.