டூத் பேஸ்ட் வாங்க சென்ற பயிற்சியாளருக்கு இப்படி ஒரு நிலைமையா?
டூத் பேஸ்ட் வாங்க சென்ற பயிற்சியாளர் மீண்டும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. முதலில் சீனாவில் பரவிய இந்த கொரோனா வாயிரஸ் தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாளிக்க துவங்கியுள்ளது. இதனால், ஒவ்வொரு நாட்டு அரசும் இந்த வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இதுவரை இந்த வைரஸால், 4,628,549 பேர் பாதிக்கப்ட்டுள்ள நிலையில், 308,645 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஜெர்மனியில், பன்டேஸ்லிகா கால்பந்து போட்டிகள் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்குபெறும் வீரர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆஸ்பர்க் கிளப் பயிற்சியாளர் ஹெர்லீஸ் என்பவர், விதிகளை மீறி டூத் பேஸ்ட் வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார். இதனால், இவர் மீண்டும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.