நான் பிச்சையெடுத்தும், கடன் வாங்கியும் இவர்களுக்கு உதவுவேன் – நடிகர் பிரகாஷ்ராஜ்
என் சக மக்களான இவர்களுக்கு நான் பிச்சையெடுத்து, கடன் வாங்கியும் தொடர்ந்து உதவுவேன்.
இந்தியா முழுவதும், கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெளிமாநிலங்களில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் தவித்து நிற்பதுடன், ஒரு வேளை உணவு கிடைப்பது கூட, அவர்களுக்கு கேள்வி குறியாக தான் உள்ளது.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் புகைப்படத்தை தான் ட்வீட்டரில் பகிர்ந்து, ‘என் சக மக்களான இவர்களுக்கு நான் பிச்சையெடுத்து, கடன் வாங்கியும் தொடர்ந்து உதவுவேன்.’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.