தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீக்குச்சி உற்பத்தி பாதிப்பு!
ஊரடங்கு உத்தரவு காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், தீக்குச்சி உற்பத்தி பாதிப்பு.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், உள்ள தீப்பெட்டி ஆலைகள் கடந்த இரண்டு வாரங்களாக , அரசு விதித்த நிபந்தனைக்களுக்கு கட்டுப்பட்டு இயங்கி வருகிறது.
இந்நிலையில், தீக்குச்சி செய்ய தேவையான முக்கிய மூல பொருட்களான குளோரைட், கேசின், பைக்ரோமைட் போன்ற முக்கிய மூலப்பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால், தீப்பெட்டி உற்பத்தி குறைந்துள்ளது.மேலும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், தமிழக அரசிடம், மூலப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் ஆர்.எஸ்.சுரேஷ் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், மூலப்பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுவதால், ஊரடங்கு உத்தரவு காரணமாக அவை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மூலப்பொருட்களின் விளையும் அதிகரித்துள்ளது.
மேலும், மூலபொருட்களின் வரத்து குறைந்தாலும், செலவு குறையவில்லை. மூலப்பொருட்கள் தட்டுப்பாடு உள்ளது என ஏற்கனவே அரசிற்கு அறிவித்துள்ளோம். மூலப்பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.