சிபிஎஸ்இ 10,+2 பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு- மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
சிபிஎஸ்இ 10,+2 பொதுத்தேர்வு அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தரப்பில் அறிவிக்கப்பட்டது.
தற்பொழுது, சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
Attention Students!
Releasing the date sheet for #CBSE Board Examinations for Class 10th and 12th today at 5.00 pm.
Stay tuned for more details…#IndiaFightsCOVID19@PMOIndia @HMOIndia @HRDMinistry @mygovindia @SanjayDhotreMP @cbseindia29 @PIB_India @MIB_India @DDNewslive— Dr Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) May 16, 2020