இந்தியாவுக்கு வெண்ட்டிலேட்டர்களை நன்கொடையாக அளிக்கும் – டிரம்ப்.!

Default Image

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்களை தந்து உதவி செய்வோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையை அளிக்கிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,940 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 2,752 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் குணமடைந்து 30,153 பேர் வீடு திரும்பி உள்ளனர். 

சமீபத்தில் இந்தியா கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் நிலையில் அமெரிக்கா 3.6 மில்லியன் டாலர்கள் அதாவது (ரூ.27 கோடி ) கொடுப்பதாக அறிவித்தது. இந்நிலையில், இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்களை கொடுத்து உதவி செய்வோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடி, தனக்கு மிகவும் நல்ல நண்பர். கொரோனாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் வழங்கப்படும். கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் என்ற எதிரியை வீழ்த்த இந்தியாவிற்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Allu Arjun house stone pelters
NEET exam - Supreme court of India
Smriti Mandhana
TN Minister Anbil Mahesh
Sunny Leone shony sins scam
GOLD PRICE