உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தற்பொழுது வரை 4,628,549 பேரை பாதிப்புள்ளாகியதோடு, 308,645 பேரை உயிரிழக்கவும் செய்துள்ளது.
நாளுக்கு ஆள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தற்பொழுதும் குறைந்த பாடில்லை. நேற்று ஒரே நாளில் புதியதாக 99,405 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 5,072 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தற்பொழுது உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,628,549 ஆகவும். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 308,645 ஆகவும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
மேலும், 1,758,039 பேர் கொரோனாவுக்கு தப்பி குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர். அது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழத்தவர்களை தவிர்த்து, தற்பொழுது மருத்துவமனையில் 2,558,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.