விவசாயிகளுக்காக போராடினால் குண்டர் சட்டத்தில் கைது செய்வதா?-சேலம் வளர்மதியின் பெற்றோர் கொந்தளிப்பு!
என்னுடைய மகள் அரசுக்கு எதிராக போராடவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக்கூடாது என்றுதான் போராடினார். இதற்காக, மாணவி என்றும் பாராமல் குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்தது எங்கள் குடும்பத்துக்கு மன உளைச் சலை ஏற்படுத்தி உள்ளது” என்று
வளர்மதியின் தந்தை மாதையன் கூறியுள்ளார்.
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் போராடும் மக்களுக்கு ஆதரவு தரக்கோரி, சேலத்தில் அரசு மகளிர் கல்லூரி அருகே துண்டுப் பிரசுரம் விநியோ கித்த வளர்மதி(23) தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், சேலம்விராணத்தை அடுத்த பள்ளிக்கூடத்தாதனூரை சேர்ந்த மாதையன்(53) கமலா(50) தம்பதி யரின் மகள். ஜீவானந்தம்(26), கதிர வன்(21) ஆகியோர் வளர்மதியின் சகோதரர்கள் ஆவர். இதில் ஜீவானந் தம் வீட்டிலேயே தறிப் பட்டறை வைத்துள்ளார். இளைய சகோ தரர் கதிரவன் ரேடியாலஜி படித்து விட்டு திருச்சியில்ப ணிபுரி கிறார்.
திருச்சியில் 1 மாதம் சிறை:
நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாக தானும் போராடப் போவ தாகக் கூறினார். கோவையில் இருந்து நெடுவாசலுக்கு ரயிலில் சென்றபோது, போராட்டம் தொடர் பாக துண்டு பிரசுரம் விநியோகித்தார். அப்போது, குளித்தலை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். திருச்சி சிறையில் ஒரு மாதம் வரை இருந்த அவர், கடந்த மே மாதம் விடுவிக்கப் பட்டார்.
அதன் பின்னர் போலீஸார் எனது மகளைத் தேடி வீட்டுக்கு வந்தனர். அவர்களிடம் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியது தவிர வேறு என்ன குற்றம் செய்தேன்? என்று வளர்மதி தைரியமாக கேட்டார். இந்த சம்பவத்தை அடுத்து நாங்களும் இதுபோன்ற போராட்டங்களுக்கு ஏன் செல்கிறாய்? என்று வளர்மதியிடம் கேட்டோம். ஆனால், விவசாயிகள் படும் வேதனையை அவர் எங்களிடம் எடுத்துக் கூறியபோது, வளர்மதியின் போராட்டத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்தோம்.
நக்சலைட் தொடர்பு கிடையாது:
ஆனால், போலீஸார் கூறுவது போல, நக்சலைட் போன்றவர்களுடன் என் மகளுக்கு தொடர்பு கிடையாது. இதே ஊரைச் சேர்ந்த பழனிவேலு (நக்சலைட்) எங்களுக்கு தூரத்து உறவுமுறை. இதனால், நக்சலைட்டு களுடன் தொடர்பு என்று போலீஸார் கூறுகின்றனர். அரசுக்கு எதிராக வளர்மதி போராடவில்லை. விவசாயி களின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடாது என்றுதான் போராடுகிறார். இதற்காக, மாணவி என்றும் பாராமல் என் மகளை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது, எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்