பேசுவதன் மூலம் பரவும் கொரோனா.! சத்தமா பேசுனா இன்னும் அதிகம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!

Default Image

கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் ஒரு நிமிடம் சத்தமாக பேசும்போது, கண்ணுக்கு புலப்படாத 1000க்கும் மேற்பட்ட உமிழ்நீர்த் திவலைகள் உருவாவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரசால் உலகமே மிரண்டு போய் இருக்கிறது. இதனை சமிழக முடியாமல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தாலும் வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஒரே வழி வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதற்கான சரியான மருந்தை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. மேலும், வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது மற்றும் கைகளை அடிக்கடி சுத்த செய்வதை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேசுவதன் முலமாக கொரோனா வைரஸ் பரவும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது, பேசும்போது எச்சில் உமிழ் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவும் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று அமெரிக்காவின் தேசிய அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, மக்களை பேச வைத்து சோதனை செய்ததில் சில வார்த்தைகளை மெதுவாகவும், பிறகு வேகமாகவும் உச்சரிக்க செய்தனர். இந்த சோதனையில், கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் ஒரு நிமிடம் சத்தமாக பேசும்போது, வைரசை சுமந்த, கண்ணுக்கு புலப்படாத 1000க்கும் மேற்பட்ட உமிழ்நீர்த் திவலைகள் உருவாவதை கண்டுபிடித்துள்ளனர். பின்னர், சில நபர்கள் சத்தமாக பேசும்போது, மற்றவர்களை விட 10 மடங்கு அதிகமான வைரசை காற்றில் பரவுவதும் தெரியவந்தது. 

இவ்வாறு காற்றில் பரவும் உமிழ்நீர்த் திவலைகள், 8 நிமிடம் முதல் 14 நிமிடம் வரை மிதந்து கொண்டிருப்பதையும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆகையால், இருமல், தும்மல் போலவே, பேசுவது மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவுவது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், எந்தவித அறிகுறியும் இல்லாதவர்கள், சாதாரணமாக பேசுவதன் மூலமே கொரோனாவை பரப்பமுடியும் என்பதால், மாஸ்க் அணிய வேண்டியதன் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று விஞ்ஞானிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்