பெற்றோர்களே குழந்தைகளை சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

Default Image

இன்றைய பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வளர்ப்பதை கூட சிரமமாக தான் கருதுகின்றனர். அந்த வகையில் குழந்தைகள் பெற்றோர்கள் என்ற உறவில் சில நேரங்களில் அவர்களை சமாளித்தாலும், சில நேரங்களில் அந்த குழந்தைகளை சமாளிப்பது கூட கடினமான ஒரு சூழ்நிலை ஆக தான் கருதுகின்றனர்.

பல சவால்களை ஏற்று குழந்தைகளை பெற்றோர்கள் வளர்ந்தாலும் குழந்தைகளிடம் உள்ள சில சிக்கலான குணாதிசயங்களை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருப்பது இல்லை. தற்போது இந்த பதிவில் பெற்றோர்கள் சிக்கலான தருணங்களை, குழந்தைகளிடம் எவ்வாறு கையாளலாம் என்பது பற்றி பார்ப்போம்.

கோபம் 

இன்றைய குழந்தைகளைப் பொறுத்தவரையில், ஒரு சின்ன விஷயங்களுக்குக் கூட கோபப்படுவதை ஒரு சுபாவமாக கொண்டுள்ளனர். தனக்கு பிடித்தது ஏதாவது கிடைக்கவில்லை என்றால், அதனை கட்டாயப்படுத்தி பெற்றோர்களிடம் கேட்டு அழுதாலும் கிடைக்காத பட்சத்தில் கோபத்தை வெளிப்படுத்தி அதனை பெற்றுக் கொள்ள நினைக்கின்றனர். குழந்தைகளின் இந்த தந்திரமான குணத்தை  பெற்றோர்கள் எப்படி கையாளலாம்.

தீர்வுகள் 

முதலில் குழந்தைகள் கோபமாக இருக்கும் போது பெற்றோர்கள் அமைதியாக இருக்க வேண்டும். குழந்தை அழுகிறான் என்பதற்காக , உடனடியாக எந்த செயலலிலும் ஈடுபடக்கூடாது. குழந்தை அழுகிறான் என்றால் அவன் அழுவதை நிறுத்தியவுடன், அவனுடைய தேவையை கேட்க, நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்று அவரிடம் சொல்ல வேண்டும்.

பின் குழந்தையை திசை திருப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும். குழந்தைகளின் தந்திரங்களுக்கு அடிபணியாமல்,  அமைதியடையும் வரை உங்கள் வழக்கமான நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

கீழ்ப்படியாமை 

இன்றைய குழந்தைகள் மத்தியில், கீழ்படிதல் என்ற குணத்தை பார்ப்பது மிகவும் அரிதாக உள்ளது. வளர்ந்து வரும் குழந்தைகள் அவர்கள் வளரும் பருவத்திலேயே கீழ்ப்படிதல் என்ற குணத்தை பெற்றோர்கள் ஊட்டி வளர்க்க வேண்டும்.   

தீர்வு 

குழந்தைகள் கீழ்ப்படியாமல் வளர்வதற்கு பெற்றோரும் ஒரு காரணமாக இருக்கின்றனர். முதலில் குழந்தைகள் ஏதாவது ஒரு கருத்தினை சொல்லும்போது, அந்த கருத்தை மதித்து அமைதியாக இருக்க வேண்டும். அவர்கள் அதை ஏன்செய்ய விரும்பவில்லை என்று குழந்தைகளிடமே கேட்டு, பொறுமையாக அவருடைய கருத்துகளை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் பிள்ளைகள் ஏன் அதை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை குழந்தைகளுக்கு விளக்க வேண்டும்.  பின் அவர்களிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். இதற்கு மாறாக அவர்களின் கருத்து பிடிக்காத பட்சத்தில் குழந்தைகளிடம் எரிந்து விழுவது, கோபத்தில் கத்துவது போன்ற குணாதிசயங்களை குழந்தைகளிடம் வெளிப்படுத்தக்கூடாது. இப்படி வெளிப்படுத்தும் பட்சத்தில் கீழ்ப்படியாமல் குழந்தைகள் வளர்வதற்கும் இதுவும் ஒரு காரணமாக அமைகிறது.

பொருட்களை உடைத்தல் 

சில குழந்தைகள் கோபத்தின் உச்சியில் பொருட்கள் உடைப்பதுண்டு. இது நம்மை மட்டுமல்லாமல், நம்மை சுற்றி இருப்பவர்களையும் கோபப்படுத்துவதுடன், விசனத்திற்குள்ளாக்குகிறது. 

தீர்வு 

முதலில் உங்கள் குழந்தைகளுடன் பேசி, அவர் ஏன் விரக்தியடைகிறார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தையாக இருந்தால், பள்ளியில் ஏதேனும் சூழ்நிலை காரணமாக உங்கள் குழந்தை அழுத்தமாக இருந்தால்,  குழந்தையின் விரக்திக்கு தீர்வு காணும் வகையில், அவரது ஆசிரியர்களுடன் பேச முயற்சிக்க வேண்டும்.

பொய்

குழந்தைகளை பொறுத்தவரையில், அவர்கள் மிக சிறிய வயதில் கூறும் வேடிக்கையான பொய்யாக இருந்தாலும், அதனை கண்டிக்க வேண்டும். நாம் சிறு வயதிலேயே அவர்கள் சொல்லும் பொய்யை ரசித்து சிரிக்காமல், அவர்களை திருத்தலாம் என்று முயற்சிக்க வேண்டும். 

தீர்வு 

நமது பிள்ளைகள் பொய் சொல்லும்போது அவனைத் திட்டுவதைத் தவிர்க்க விடும்.  குழந்தைகளுடன் திறந்த மனதுடன் பேசும் போது, குழந்தைகள் ஏன் பொய் சொல்ல வேண்டும் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். அவர் ஏன் பொய் சொல்லக்கூடாது என்று உங்கள் குழந்தைக்குத் தெரியப்படுத்துங்கள். மேலும் அவர்களிடம் குழந்தைகள் உண்மையை சொன்னால் அடிக்கமேட்டேன் என உறுதியளித்தாலே எதையும் மறைக்காமல் சொல்லுவார்கள்.

சகோதரத்துடன் போட்டி 

ஒரு வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள வீட்டில் அவர்கள் மத்தியில் போட்டி நிலவுவது உண்டு. இதை பெற்றோர்கள் அப்படியே விடாமல், அவர்கள் மத்தியில், அன்பை வளர்த்துக் கொள்ள தேவையான பண்புகளை கற்று கொடுக்க வேண்டும். 

தீர்வு 

எதற்காக இவர்கள் ஒருவருக்கு ஒருவர் பழி கூறுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். ஒருவருக்கு சார்பாக பேசாமல், பெற்றோர் என்ற நிலையில், இருவரின் மீதும் பாகுபாடு பார்க்காமல், சம உரிமையுடன் சேயாள்பட வேண்டும். சகோதரத்திற்கு மத்தியில் அமைதியான முறையில் தீர்வு கண்டுபிடிக்க வேண்டும். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
UdhayanidhiStalin
Chennai Super Kings IPL Auction
India won the Test Match
Heavy Rain - cyclone
meena (10) (1)
Red Alert - Heavy Rains