டாடா(TATA) கார் நிறுவனத்தின் சிறப்பு சலுகைகள்.!!
நிதி ஆண்டு முடியும் தருவாயில் கார் விற்பனையை அதிகரிக்கவும், உகாதி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு கார் வாங்குவோர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் சிறப்பு தள்ளுபடி சலுகைகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
டாடா டியாகோ(tata tiago) விற்பனையில் கலக்கி வரும் டாடா டியாகோ காருக்கு ரூ.28,000 மதிப்புடைய சிறப்பு சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். ஒரு ரூபாய்க்கு முதல் ஆண்டு இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஒரு லட்ச ரூபாய் வரையிலான சிறப்பு பரிசுத் திட்டத்தை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
டாடா டீகோர் (tata tigor)டாடா டீகோர் காருக்கு ரூ.32,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்த காருக்கும் ரூ.1 இன்ஸ்யூரன்ஸ் திட்டமும், ரூ.1 லட்சம் வரையிலான சிறப்பு பரிசுத் திட்டமும் உள்ளது. டாடா டீகோர் கார் 84 பிஎச்பி திறன் வாய்ந்த 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 69 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கிறது.
டாடா ஸெஸ்ட்(Tata Zest) டாடா ஸெஸ்ட் காருக்கு அதிகபட்சமாக ரூ.65,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். இந்த காருக்கும் ரூ.1 இன்ஸ்யூரன்ஸ் திட்டம் வழங்கப்படுகிறது. இந்த கார் பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 89 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.2 லிட்டர் எஞ்சின் உள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.
டாடா சஃபாரி ஸ்ட்ராம்(tata safari storme) டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிக்கு ரூ.80,000 மதிப்புடைய சேமிப்பை பெற முடியும். இந்த மாடலுக்கு ரூ.1க்கு இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசுகளை பெறும் வாய்ப்புடைய பரிசுத் திட்டமும் உள்ளது.
டாடா ஹெக்ஸா(Tata Hexa) டாடா ஹெக்ஸா காருக்கு ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்பை இப்போது பெற முடியும். ஒரு ரூபாய்க்கு இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் திட்டத்துடன் கிடைக்கிறது.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.
Special offers for Tata (TATA) car