10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? தள்ளிவைக்க கோரிய மனு விசாரணை.!

Default Image

10-ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரி மனு இன்று உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

சமீபத்தில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். அப்போது, கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும்  +1 தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவித்தார்.

அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையும், + 1 வகுப்பு ஒத்தி வைக்கப்பட்ட  தேர்வு ஜூன் 2-ம் தேதியில் நடத்தப்படும். அதேபோல, 34, 842 மாணவர்கள் பேருந்து  வசதிஇல்லாமல் கடந்த மார்ச்  24-ம் தேதி  தேர்வு எழுத முடியாமல் போனது. அதனால், அந்த  +2 மாணவர்களுக்கு ஜூன் 4-ம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவித்தார்.

+2  தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 27-ம் தேதி தொடங்கப்படும். மேலும் தேர்வு எழுதுள்ள மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுக்கு செய்து தரப்படும். இதனால், பெற்றோர் அச்சப்பட தேவையில்லை என  அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

இதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு உள்ள இந்த காலத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ஒத்திவைக்க திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தரப்பினர் தேர்வு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, இன்று 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்