கொரோனா போனாதான் கல்லூரிகள் திறக்கப்படும் – அமைச்சர் அன்பழகன்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுவதும் நீங்கிய பிறகே கல்லுரிகள் திறக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை விட்டு கொரோனா பாதிப்பு நீங்கிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு பயம் இல்லை என்ற நிலை வந்த பிறகே கல்லூரிகளை திறப்பதில் தமிழக அரசு உறுதியாகவுள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியுள்ள கல்லுரிகளில் கிருமிநாசினி தெளித்து, தூய்மைப்பணி முடிந்த பிறகே வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார். கல்லூரிகளில் தற்போது கொரோனா முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், எந்த நேரத்திலும் செமஸ்டர் தேர்வு நடத்தவும் தமிழக அரசு தயாராக உள்ளது என்றும் பி.இ. கலந்தாய்வுக்கு ஆன்லைனிகளில் முன்பதிவு செய்யவும் அரசு தயாராக இருக்கிறது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுமார் 45 நாட்களுக்கு மேல் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு தேர்வுவின் புதிய தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.