திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதி… முன்னேற்பாடுகள் தீவிரம்…
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவிய நிலையில் இந்தியாவில் பரவலை தடுக்க முழூ ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் உள்ள நிலையில், மே 17ம் தேதிக்கு பின் வழிபாட்டு தலங்களை திறக்க வாய்ப்புள்ளதால், திருப்பதி கோயிலில் சமூக இடைவெளியுடன் பக்தர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதனால், ஆந்திர மாநில இந்து அறநிலையத் துறையினர், அனைத்து கோயில்களிலும் சமூக இடைவெளியுடன் பக்தர்களை அனுமதிப்பதற்காக ஒரு மீட்டர் இடைவெளியுடன் எல்லை கோடுகளை வரைந்து வருகின்றனர். எனவே பக்தர்களை அனுமதிக்க ஏழுமலையான் கோயிலிலும் முன்னேற்பாடு நடந்து வருகிறது.