100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வு! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வை அறிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்பு திட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில் ரூ.3.60 லட்சம் கோடிக்கு திட்டங்களை அறிவித்திருந்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது செய்தியாளர்களை சந்தித்து 2 ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலமாக மே 13 ஆம் தேதி வரை 14.62 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 100 நாள் வேலைத்திட்டத்தில் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களை பணியமர்த்தும் முயற்சி நடைபெற்று வருகிற நிலையில், இத்திட்டத்தில் ஒரு நாளுக்கான ஊதியம் ரூ.182 இல் இருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.