சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31ம் தேதி வரை நீட்டிப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதுமட்டுமில்லாமல் ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்திருந்தார். இந்த திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி பிரதமர் மோடி அறிவித்த பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்பு திட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் சந்தித்தார்.அப்பொழுது ,சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மார்ச் 1-ஆம் தேதி முதல் மே 31ம் தேதி வரைநீட்டிக்கப்படுகிறது .ஊரக கிராமப்புற வங்கிகளுக்கு நபார்டு மூலம் ரூ.29,500 கோடி கடனுதவி செய்யப்பட்டுள்ளது . 25 லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக கடன் அட்டைகள் வழங்கப்படும். கடந்த 2 மாதங்களில் 25 லட்சம் கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 3 கோடி விவசாயிகளுக்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.