எச்சரிக்கை.! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் .!

வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலமாக  காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி பின்னர் ஆம்பன் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலமாக  காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்  என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி மூலம் தென்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.