இன்று காலை 11 மணிக்கு உயர்மட்ட குழு ஆலோசனை.!
கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தை சீரமைக்க ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை.
கொரோனவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் நாடு கடும் பொருளாதார சரிவை கண்டுள்ளது. அந்தவகையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தை சீரமைக்க ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், தொழில்துறையினர், வணிகர்கள் உள்ளிட்டோரிடம் உயர்மட்டக்குழு கருத்துக்களை கேட்டறிந்து செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.
இதையடுத்து, உயர்மட்டக்குழு தமிழகத்தில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தை சீரமைப்பது குறித்து ஆய்வு செய்து 3 மாத காலத்தில் அரசிடம் அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான உயர்மட்ட குழு இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உயர் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.