இங்கிலாந்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வெளியிட்ட புதிய வழிமுறைகள் !
இங்கிலாந்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வெளியிட்ட புதிய வழிமுறைகள்.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 226,463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கிலாந்து உலகளவில் நான்காம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் 32,692 பேர் உயரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனாவை கட்டுபடுத்த பல்வேறு வழிமுறைகள் அறிவித்துள்ளனர். அதாவது, அடிக்கடி கை கழுவ வேண்டும், துணிகளை துவைத்து உபயோகிக்க வேண்டும், வீடுகளில் காற்றோட்டம் உள்ளபடி ஜன்னலை திறந்து வைக்க வேண்டும், மற்றவர்களிடம் பேசுவதை குறைக்க வேண்டும் என்று புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளனர்.