LIVE: தமிழகத்தில் உணவு பற்றாக்குறை இல்லை- முதலமைச்சர் .!

Default Image

தமிழகத்தில்  ரேஷன் பொருட்கள் தடையின்றி தருவதால் உணவு பற்றாக்குறை இல்லை என தெரிவித்தார்

இந்தியாவில் கொரோனா கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்  அதிகாரித்து வருகிறது.தற்போது மூன்றாவது கட்டமாக மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.  இதனால், அத்தியாவசிய கடைகள் காலை 6  மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நகர் பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் 50 % ஊழியர்களுடன் இயங்கலாம் என்ற  பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்  முதலமைச்சர் பழனிசாமி  காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.  இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி,  விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் இந்த காணொளி காட்சியில் பங்கேற்றுள்ளனர்.

அப்போது பேசிய முதலமைச்சர், அரசு அறிவிக்கும் விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும். எந்தளவிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருகிறார்களோ அந்த அளவிற்கு ஊரடங்கு தளர்வு செய்யப்படும்.

பொதுமக்கள்  ஒத்துழைப்பின்றி இதனை நடைமுறை படுத்துவது மிகவும் சிரமம். வைரஸ் கட்டுப்படுத்துவது பொதுமக்கள் கையில் தான் உள்ளது என தெரிவித்தார்.  தமிழகத்தில்  ரேஷன் பொருட்கள் தடையின்றி தருவதால் உணவு பற்றாக்குறை இல்லை.

மே மாதம் போலவே ஜூன் மாதத்தில் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும். இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்கம் அதிகரித்து அதன் பின்னர் குறையும். இது தான் பல நாடுகளில் நிகழ்ந்துள்ளதது என கூறினார்.

கொரோனா பரிசோதனைகள் அதிகம் என்பதால் தான்  பாதிப்பு  எண்ணிக்கை அதிகம். இந்தியாவிலேயே இறப்பு சதவீதம் குறைந்த மாநிலம் தமிழகம்தான்.இந்தியாவிலேயே 53 பரிசோதனை நிலையங்கள் கொண்ட மாநிலம் தமிழகம்தான். கொரோனா பாதிப்பு ஏறித்தான் இறங்கும் என்பது மருத்துவ வல்லுநர்கள் கருத்து என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்