அமெரிக்காவில் 83 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்துள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ள நிலையில், இதனை முற்றிலுமாக அழிப்பதற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த கொரோனா வைரஸால் இதுவரை, உலக அளவில் 4,342,849 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 292,899 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தால், அதிகமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், பலியானவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான்.
இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை, 1,408,636 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 83,425 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் நேற்று மட்டும் இந்த கொரோனா வைரஸால், 1,630 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025