தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பேருந்து வசதி – அமைச்சர் செங்கோட்டையன்.!

Default Image

தேர்வு எழுத உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு  மாணவர்கள் அனைவருக்கும் பேருந்து வசதி செய்து தரப்படும் என  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நேற்று, காலை சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும். மேலும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வு ஜூன் 2-ம் தேதியும்,  12-ம் வகுப்பை சேர்ந்த 36,842 மாணவர்களுக்கு ஜூன் 4-ந்தேதி தேர்வு நடைபெறும் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி வருகின்ற 27-ந்தேதி தொடங்கும். பள்ளிகள் திறப்பது  குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறினார். இந்நிலையில் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் செங்கோட்டையன்,  தேர்வு எழுத உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு  மாணவர்கள் அனைவருக்கும் பேருந்து வசதி செய்து தரப்படும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament
Protest against Amit shah speech
GOLD PRICE