27,07,38,000 கோடியை கொடுக்கும் அமெரிக்காவின் CDC மையம்

Default Image

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்  (CDC)  இந்தியா கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் நிலையில் 3.6 மில்லியன் டாலர்கள் கொடுத்து உதவ முன்வந்துள்ளது .

இவற்றை வைத்து  கொரோனா வைரஸை கண்டறிதல் ,தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (ஐபிசி), சிறப்பான மையங்கள் அமைக்க மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் மேலும் கண்காணிப்புகளை அதிகப்படுத்துவதன் மூலம் உள்ளூர் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தப்படும் என்று அமெரிக்க தூதரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர்  தான் அமெரிக்கா இந்தியாவிற்கு கொரோனா வைரஸுக்கு எதிராக போராட 3 மில்லியன் டாலர் மதிப்புள்ள உதவி செய்யும்  வகையில் அதை பஹால் திட்டத்திற்கு அளிப்பதாக அறிவித்தது .

இந்தியாவில் இதுவரை (மே 12 ) கொரோனா வைரஸினால் 70,756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 22,455 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 2,223 பேர் உயிரிழந்துள்ளனர் .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்