சுவையான மசால் வடை குழம்பு செய்வது எப்படி?
வடை என்பது நாம் சாதாரணமாக டீ அல்லது காபியுடன் சேர்ந்து சாப்பிடக்கூடிய ஒன்றாகத்தான் உள்ளது. ஆனால் இந்த வடையை வைத்தே எவ்வாறு குழம்பு செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
- மசால் வடை
- வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மல்லி தூள்
- மிளகாய்த்தூள்
- மஞ்சள் தூள்
- துருவிய தேங்காய்
- முந்திரி
- இஞ்சி
- சோம்பு
- கிராம்பு
- மிளகு
- கருவேப்பிலை
- எண்ணெய்
- உப்பு
செய்முறை
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு ஏறியதும் முந்திரி மற்றும் சோம்பு ஆகியவற்றை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் அதில் துருவிய தேங்காயை போட்டு லேசாக வதங்கியதும் இஞ்சி அதனுடன் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கருவேப்பில்லை கிராம்பு ஆகியவற்றை போட்டு தாளித்து அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்பு அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை அதனுடன் கலந்து சூடு ஏற விடவும். அதன் பின் தேவையான அளவு உப்பு சேர்த்து மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். கொதித்ததும் எடுத்து வைத்துள்ள மசால் வடைகளை போட்டு ஒரு கொதி விட்டு இறக்கி எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான மசாலா வடை குழம்பு தயார்.