சென்னைக்கு 2 நாள்கள் மட்டுமே ரயில் ,வழக்கமான ரயில்களை இயக்க வேண்டாம் – முதலமைச்சர் பழனிசாமி
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை இயக்க வேண்டாம் என்று மத்திய உள்துறை, ரயில்வே துறை அமைச்சருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ரயில்வேதுறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில், ரயில்வே துறை டெல்லி- சென்னை மற்றும் சென்னை -டெல்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் 13 ஆம் தேதியிலிருந்து இயக்கப்படும் என்று அறிவித்தது.
பிரதமர் மோடி நேற்று 5வது முறையாக மாநில முதல்வர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தமிழ்கத்தில் வழக்கமாக இயக்கப்படும் ரயில் சேவையை வருகின்ற 31-ஆம் தேதி வரை தொடங்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இருப்பினும் ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்ட காரணத்தால் வருகிற 14, 16 ஆகிய 2 தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.இவ்விரு ரயில்கள் தவிர இதர வழக்கமான ரயில் சேவைகள் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு டெல்லியில் இருந்து இயக்கப்படும் ராஜ்தானி ரயில் பெட்டி குளிர்சாதன வசதி கொண்டது.குளிர் சாதன வசதிகள் கொண்ட இந்த ரயில்கள் மூலமாக நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாலும், சென்னைக்கு வரும் அனைத்து ரயில் பயணிகளையும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுப்ப முடியும் என்ற காரணத்தினாலும், 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் ஒரே நேரத்தில் பரிசோதிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களையும் கருத்தில் கொண்டு ,இந்த ரயில்கள் மூலம் வரும் பயணிகளை ரயில்வே துறை மூலமே தனிமைப்படுத்தி வைக்கவும்,அவர்களுக்கு ஓரிரு நாளில் மாநில அரசின் மூலம் பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு , பரிசோதனை முடிவுகளை பெற்ற பின் தொற்று பாதித்தவர்களை மருத்துவமனைகளிலும் ,தொற்று இல்லாதவர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை வேண்டும்.மேலும் சென்னையில் கொரோனா வைரஸ் ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நோயை கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை இயக்க வேண்டாம் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற காணொலி காட்சியின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 31.5.2020 வரை வழக்கமாக இயக்கப்படும் ரயில் சேவைகளை தொடங்காமலிருக்க வேண்டும் என்று
கேட்டுக் கொண்டார் pic.twitter.com/HGAqq2LUra— DIPR TN (@TNGOVDIPR) May 12, 2020