அதிக சொத்து வைத்துள்ள அமிதாப்பச்சன் மனைவி! வரலாற்றிலே அதிக சொத்து வைத்துள்ள மாநிலங்களவை உறுப்பினர்….

Default Image

ரூ.1000 கோடி நடிகர் அமிதாப்பச்சன் மனைவி ஜெயாபச்சனின் சொத்து மதிப்பு  என தெரியவந்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனுவில் இந்த விவரத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடு முழுவதும் மாநிலங்களவைக்கு 58 எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்கிறது. நேற்று வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி என்பதால் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்தனர். முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி சார்பில், பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயாபச்சன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஜெயாபச்சன், அமிதாப்பச்சனுக்கு ரூ.650 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.460 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன. இதுதவிர நொய்டா, போபால், லக்னோ, அகமதாபாத், காந்திநகரில் நிலங்கள் வைத்துள்ளனர். அமிதாப் வைத்துள்ள நகைகளின் மதிப்பு ரூ.36 கோடி. ஜெயாபச்சனின் நகைகளின் மதிப்பு ரூ.26 கோடி. இருவரும் வைத்துள்ள 12 கார்களின் மதிப்பு சுமார் ரூ.13 கோடி. ஜெயாபச்சனுக்கு உத்தரபிரதேசம், லக்னோவில் 1.22 ஹெக்டேரில் விவசாய நிலங்கள் உள்ளன.

இவற்றின் மதிப்பு ரூ. 2.2 கோடியாகும். ஜெயாபச்சனின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1000 கோடி என்று வேட்புனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களில் அதிக சொத்து வைத்துள்ளவர் என்ற பெருமையை ஜெயாபச்சன் பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 2014ம் ஆண்டு தேர்தலின்போது பாஜவை சேர்ந்த ரவீந்திரா கிஷோர் சின்கா என்பவர் தனக்கு ரூ.800 கோடி சொத்து இருந்ததாக தெரிவித்திருந்ததே அதிகபட்ச மதிப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்