நன்கொடை அளித்த சூர்யாவிற்கு நன்றியை தெரிவித்த மதுரை எம்பி.!
அன்னவாசலில் சோறு அளித்த சூர்யாவிற்கு எனது மனமார்ந்த நன்றி .”ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்” என்பது வள்ளுவன் மொழி. ‘அகரம்’ மூலம் ஏழை மக்களின் கல்வி பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அது மட்டுமின்றி பல திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. அதில் பெப்சி தொழிலாளர்களுக்கு பல பிரபலங்கள் நிதியுதவி வழங்கினார். அதில் பெப்சி தொழிலாளர்களின் நலனை கருதி முதலில் 10 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியது சூர்யா என்பது அனைவரும் அறிந்ததே.
இது மட்டுமல்லாமல் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை சார்பாக பல்வேறு உதவிகளை ஏழைகளுக்கு செய்து வருகிறார். தற்போது மதுரை எம்பியான வெங்கடேசன் ‘அன்னவாசல்’ என்ற திட்டம் மூலம் மதுரையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மற்றும் பல பகுதிகளிலும் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகிறார். இதற்கு பலர் தங்களால் முடிந்த நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா அன்னவாசல் திட்டத்திற்காக ரூ. 5 லட்சத்தை நிதி யுதவியாக வழங்கியுள்ளார். இது குறித்து மதுரை எம்பியான வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவிற்கு நன்றியை தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நல்ல முன்னெடுப்புகள் பல நல்ல உள்ளங்களை ஒன்றிணைத்து கொண்டே நகரும். அப்படியான நகர்வில், தன் பங்களிப்பாக 5 லட்சம் நன்கொடையாக அன்னவாசலில் சோறுட்ட அளித்த சூர்யாவிற்கு எனது மனமார்ந்த நன்றி .
“ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்” என்பது வள்ளுவன் மொழி. ‘அகரம்’ மூலம் ஏழை மக்களின் கல்வி பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா. இப்போது ‘ஆகாரம்’ மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன் வந்துள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போது சூர்யாவின் இந்த செயலுக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
#அன்னவாசல் திட்டத்துக்கு@Suriya_offl
ஐந்து லட்சம் #நன்கொடைசு.வெங்கடேசன் எம்.பி நன்றி!
நல்ல முன்னெடுப்புக்கள் பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நகரும். அப்படியான நகர்வில், தன் பங்களிப்பாக 5 இலட்சம் நன்கொடையாக அன்னவாசலில் சோறூட்ட அளித்த@agaramvision
1/2 pic.twitter.com/AFD1PyjKAJ— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 11, 2020