கமிட்டி தலைவர் பதவியில் நீடிப்பதற்காக ஓய்வு பெற்றார் தடகள வீராங்கனை தீபா மாலிக்!
கமிட்டி தலைவர் பதவியை வகிப்பதற்காக தடகள வீராங்கனை பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக்.
2016 ஆம் ஆண்டு பாராலிம்பிக் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாதனையாளர் தான் மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக். இவருக்கு அர்ஜுனா, பத்மஸ்ரீ, ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய விளையாட்டு கொள்கைகளின் படி, விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் பதவிகளில் பங்கேற்க முடியாது. எனவே தற்பொழுது தீபா மாலிக்குக்கு ந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவராக பதவியேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனவே அந்த பதவியில் பங்கேற்பதற்காக தனது தடகள போட்டியில் கலந்துகொள்ளாமல் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும், இனி 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிய போட்டியில் இவர் கலந்துகொள்ளும் வாய்ப்புக்கு ஏற்படும்.
அப்படி ஏற்பட்டால் அதற்கான முடிவையும், தற்பொழுது வகிக்கும் பதவியையும் விட்டு கலந்துகொள்ளுவேன் எனவும் தீபா மாலிக் கூறியுள்ளார்.