ஜூன் 4 இல் “12 ஆம்” வகுப்பு தேர்வு நடைபெறும்.!
தமிழக முழுவதும் விடுபட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 4 இல் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் நீட், ஜேஇஇ தேர்வு மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கான புதிய தேர்வு தேதிகள் மத்திய மனிதவள அமைச்சார் அறிவித்தார்.
அந்தவகையில், தமிழகத்தில் விடுபட்ட 12 ஆம் வகுப்பை சேர்ந்த 36,842 மாணவர்களுக்கு ஜூன் 4 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 12 ஆம் வகுப்புக்கான வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் பாடங்களுக்கு ஜூன் 4 இல் தேர்வு நடைபெறும் என கூறியுள்ளார். மேலும், 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மே 27 ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையயடுத்து, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வு ஜூன் 2 ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் கூறியுள்ளார். பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.