ஒரு ரூபாய் சம்பளத்தில் படம் நடிக்கவுள்ள பிரபல நடிகை

Default Image

ஒரு ரூபாய் சம்பளத்தில் படம் நடிக்கவுள்ளதாக நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார். 

இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனால், சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கால் சினிமா தொழிலாளர்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, பிரபலங்கள் பலரும், இவர்களுக்கு உதவும் வகையில் தங்களாலான உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால், நடிகர் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி ஆகியோர் தங்களது சம்பளத்தை குறைத்துள்ளதை தொடர்ந்து, நடிகை ஆர்த்தி ஒரு வருடத்திற்கு புதிய படங்களில் ஒரு ரூபாய் சம்பளத்தில் தான் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்