சென்னைக்கு ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் – முதல்வர்

Default Image

கொரோனா தொற்று அதிகரிப்பதால் சென்னைக்கு மே 31 வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என்று முதல்வர் கோரிக்கை.

பிரதமர் மோடி இன்று மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டார். ஊரடங்கு மே 17 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், 5வது முறையாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். ஊரடங்கு தளர்வால் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்தும், பொருளாதார நடவடிக்கைகளை குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் பங்கேற்றார். அப்போது, நாளை முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கவுள்ள நிலையில், சென்னைக்கு ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடியுடன் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்று அதிகரிப்பதால் சென்னைக்கு மே 31 வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும், கொரோனா தடுப்பு பணி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்கிட சிறப்பு நிதியாக உடனடியாக ரூ.2000 கோடி நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்