அஜித் படத்தில் தளபதி இந்த கேரக்டரில் நடிக்க விரும்புனாராம்.!
அஜித் நடித்த மங்காத்தா திரைப்படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் ஆசைப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் அவர்கள் ரஜினிக்கு இணையாக சினிமாயுலகில் வளர்ந்து நிற்பவர். அதை போன்று இவர்களுக்கென்று மிகப் பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டவர்.இவர்களின்படம் ரிலீஸ் என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் அவர்கள் சமீபத்தில் மாஸ்டர் விழாவில் கூட நண்பர் அஜித் என்று கூறியது மிகவும் டிரெண்டானது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மாஸ்டர் படத்தின் ரிலீஸில் உள்ளது. மேலும் அஜித் அவர்கள் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து 1995ல் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்தனர். அதனையடுத்து நேருக்கு நேர் என்ற படத்திலும் நடிக்கவிருந்தனர். ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அஜித் அந்த படத்திலிருந்து விலக சூர்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது பிரபல இயக்குநர் ஒருவரிடம் அஜித்தின் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் என்ன ஏன் நடிக்க வைக்கவில்லை செல்லமாக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தின் திரைப்பணத்தை மாற்றியமைத்த படங்களில் ஒன்று தான் மங்காத்தா. இவரின் மார்க்கெட்டையும் இந்த படம் பெரிதும் உயர்த்தியது. இந்த படத்தில் அஜித்துடன் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடிக்க விரும்பியதாகவும், முதலில் என்னிடம் அதை குறித்து ஏன் கூறவில்லை என்றும் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் விஜய் கேட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெங்கட் பிரபு தெரிவித்தார். அதற்கு மீண்டும் உங்க இரண்டு பேர வைத்து நானே படத்தை இயக்குகிறேன் என்று பதிலளித்துள்ளராம் வெங்கட் பிரபு.