மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் மார்ச் 24-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதலில் பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னரும் தீவிரம் குறையாத நிலையில் 2-ஆம் கட்டமாக ஊரடங்கு மே 3-ஆம் தேதி நீட்டிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு மூன்றாம்கட்டமாக நீட்டிக்கப்பட்டது.
இதற்குஇடையில் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்கள்,மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டார். தற்போது ஊரடங்கு மே 17-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.இந்நிலையில் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் .மாநில முதலமைச்சர்களுடன் 5வது முறையாக மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஊரடங்கு தளர்வால் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்தும், பொருளாதார நடவடிக்கைகளை குறித்தும் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.