இந்தியாவில் சென்னை முதலிடம் : பிக்கஸ்ட்  பிராட்பேண்ட் (Biggest broadband)சேவையில்.!

இந்தியாவில் சென்னை, அதிவேக பிக்கஸ்ட்  பிராட்பேண்ட் சேவை கொண்ட நகரங்களில்  முதலிடத்தில் உள்ளது.

இணைய வேகம் மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான ‘ஓக்லா’ இந்தியாவின் மிகப்பெரிய 20 நகரங்களில் ஆய்வு ஒன்றை நடத்தியது.இந்த  ஆய்வின் முடிவில் சென்னையில் அதிவேக பிக்ஸ்ட் பிராண்ட்பேண்ட் சேவை கிடைப்பது தெரியவந்துள்ளது. சென்னையில் பதிவிறக்க வேகம் 32.67 Mbps ஆகும்.

இது பிற நகரங்களை விட, 57.7% அதிக வேகம் பெற்று விளங்குகிறது. இந்த ஆய்வு கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பீட் டெஸ்ட் மூலம் வாடிக்கையாளர்களிடம் நடத்தப்பட்டது.

சென்னையை அடுத்து, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம்,திருவனந்தபுரம் ஆகிய நகரங்கள் நாட்டின் சராசரியான 20.72 Mbpsஐவிட அதிக இணைய வேகம் கொண்டுள்ளது.

2வது இடத்தில் பெங்களூரு 27.2 Mbps வேகம் பெற்று விளங்குகிறது. 5வது இடத்தில் இருக்கும் டெல்லி 18.16 Mbps வேகம் பெற்றுள்ளது.

நாட்டின் 4 மெட்ரோ நகரங்களில் மும்பை 12.06 Mbps வேகத்துடனும், கடைசி இடத்திலும், ஒட்டுமொத்தமாக 8வது இடத்திலும் உள்ளது.

உலக அளவில் இந்தியாவின் இணைய வேகம் 20.72 Mbps உடன், 67வது இடத்தில் உள்ளது.

மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

Chennai topped in India: Biggest Broadband service!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்