கவர்ச்சி வேடங்களில் ஒருபோதும் நடிக்க மாட்டேன்.! பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்.!
நடிகை பிரியா பவானி சங்கர் கவர்ச்சி வேடங்களில் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக திரைக்கு வந்த இவர் கல்யாணம் முதல் காதல் வரை சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானார். அதனையடுத்து மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் காலெடுத்து அறிமுகமானார். அதை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் மாபியா. இப்படத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் மற்றும் பிரசன்னா ஆகியோர் நடித்திருந்தனர். அண்மையில் இவருக்கும், நடிகர் மற்றும் இயக்குநரான எஸ். ஜே. சூர்யாவையும் இணைத்து பல கிசுகிசுக்கள் வெளியாகின. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் கமல்ஹாசனின் இந்தியன் 2.
இந்த நிலையில் தற்போது இவரிடம் நீங்கள் கவர்ச்சியான வேடங்களில் நடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் கண்டிப்பாக கவர்ச்சியான வேடங்களிலோ, காட்சிகளிலோ ஒரு போதும் நடிக்க மாட்டேன் என்றும், அப்படி ஏதும் வந்தாலும் அந்த வாய்ப்பை தவிர்த்து விடுவேன் என்றும் பதிலளித்துள்ளார்.