தமிழகத்தில் தற்போது வரை ஊரடங்கை மீறியதாக 4,54,016 பேர் கைது – தமிழக காவல்துறை

Default Image

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது இந்த முழு  ஊரடங்கை சில விஷமிகள் மதிக்காமல் வெளியே சுற்றி திரிந்தனர். அவர்கள் மீது ஊரடங்கை மீறியதாக கைது செய்தனர். அந்த வகையில்,

  • தற்போது வரை 4,54,016 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சீர்மிகு  தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,434 பேர் ஊரடங்கை மீறியதாக கைது   செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
  •   மேலும், ஊரடங்கை மீறியதாக 3,75,792 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,993 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டடுள்ளது.
  • இதுவரை 4,28,015 வழக்குகளும், ரூ.4,91,79,379  கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் 5240 வழக்குகளும், ரூ.5,05,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
  • வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒரு முறை 10 நபர்களுக்கு என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு  வருகிறது.
  • கடந்த 24ம் தேதி முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட வரிசை படி உரிமையாளர்களுக்கு வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
  • வாகனம் பெற வரும்போது எப்ஐஆர் நகல், ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், வாகனத்தின்  ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nitish kumar reddy
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi