லாரன்ஸின் வேண்டுகோளை ஏற்று சம்மதம் தெரிவித்த தளபதி விஜய்.!

லாரன்ஸின் கோரிக்கையை ஏற்று விஜய்யும், அனிருத்தும் சம்மதித்து விட்டதாகவும், இதனை விஜய் லாரன்ஸிற்கு போன் செய்து தெரிவித்தார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தளபதி விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படம் ஊரடங்கு முடிந்து தியேட்டர்களுக்கு அனுமதி அளித்தவுடன் ரிலீஸ் ஆக ரெடியாக இருக்கிறது. இந்த படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் பலரது வரவேற்பை பெற்றது.
இதற்கு பலரும் நடமாடி, இசையமைத்து விடீயோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தன்சன் எனும் மாற்றுத்திறனாளி தனக்கு இரு கைகள் இல்லாத சூழ்நிலையிலும் வாத்தி கமிங் பாடலுக்கு இசையமைத்து இருந்தார்.
இதனை குறிப்பிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் தனது இணையதள பக்கத்தில் தன்சன் ஆசையை தெரிவித்தார். தன்சன், விஜய் முன்னிலையில் வாத்தி கமிங் பாடலை வாசித்து காண்பிக்க வேண்டும். எனவும் அனிருத் இசைக்கு பணியாற்ற வேண்டும் எனவும் தன்சன் ஆசையை தெரிவித்தார். இதனை விஜய்க்கும், அனிருத்துக்கும் வேண்டுகோளாக வைத்திருந்தார்.
லாரன்ஸின் கோரிக்கையை ஏற்று விஜய்யும், அனிருத்தும் சம்மதித்து விட்டதாகவும், இதனை விஜய் லாரன்ஸிற்கு போன் செய்து தெரிவித்தார் எனவும் லாரன்ஸ் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
My Big thanks to Nanban Vijay and Anirudh sir @actorvijay @anirudhofficial pic.twitter.com/ZULMRngOaf
— Raghava Lawrence (@offl_Lawrence) May 10, 2020