பிளாஸ்மா சிகிச்சை பெற்ற முதல் கொரோனா நோயாளி மாரடைப்பால் மரணம்.!

உத்தர பிரதேசத்தில் பிளாஸ்மா சிகிச்சை பெற்ற முதல் கொரோனா நோயாளியான 58 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என கேஜிஎம்யூ மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் துணைவேந்தர் எம்எல்பி பாட் தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 58 வயது மருத்துவருக்கு முதல் முறையாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் நேற்று மாரடைப்பால் இறந்துவிட்டதாக கேஜிஎம்யூ மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் துணைவேந்தர் எம்எல்பி பாட் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், அவருக்கு இரண்டாம் முறை கொரோனா சோதனை நடத்தினோம். அப்போழுது அவருக்கு தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது. ஆனால் சிறிது மணிநேரத்திலே அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
58 வயதான அவருக்கு, இரத்த அழுத்தத்தாலும், நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டு வந்தார். அதுமட்டுமின்றி, சிறுநீரக பிரச்னையாலும் அவஸ்திப்பட்டு வந்தார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 14 நாட்களாக வென்டிலேட்டரில் இருந்தார் என மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணைவேந்தர் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025