மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை – அமைச்சர் செங்கோட்டையன்
தனிமனித இடைவெளியுடன் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் – அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், தனிமனித இடைவெளியுடன் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதனிடையே நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. இதனால் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்த தேர்வுகள் நடத்தப்படாமல் 1 முதல் 9 வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி என தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் அறிவிக்கப்பட்டது.
மேலும் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முதற்கட்ட ஊரடங்கு பின்னர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும் என்றும் உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பின் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.