டிரம்ப் நிர்வாக திறனில் குளறுபடி.! முன்னாள் அதிபர் ஒபாமா கடுமையான விமர்சனம்.!

Default Image

டிரம்ப் நிர்வாக திறனில் உள்ள குளறுபடியால் தான் அமெரிக்கா பேரழிவை சந்தித்துள்ளது என்று முன்னாள் அதிபர் ஒபாமா கடுமையான விமர்சனம்.

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இதில் குறிப்பாக அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கொரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,47,318 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 80,040 ஆகவும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனிடையே இந்த கொரோனா வைரஸை சீனாதான் பரப்பி விட்டதாக தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் குற்றசாட்டு வருகிறார். பின்னர் உலக சுகாதார அமைப்பை, சீனாவுக்கு ஆதரவாக இருக்கு என்று கூறி வழங்கப்படும் நிதியையும் நிறுத்தி வைப்பதாக மிரட்டல் விட்ட நிலையில், அதிபர் டிரம்ப் நிர்வாக திறனில் உள்ள குளறுபடியால் தான் அமெரிக்கா பேரழிவை சந்தித்துள்ளது என்று முன்னாள் அதிபர் ஒபாமா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அங்குள்ள சிஎன்என் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் தற்போது நடைபெறும் ஆட்சி மீது முன்னாள் அதிபர் ஒபாமா கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. அதில், உயிரிழப்பு குறித்து சிறிதும் கவலைப்படாத அரசால் அமெரிக்கா பெரும் இழப்பை சந்தித்துள்ளது. சுயநலவாதியாக நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலும் இருக்கும் ஒரு அரசாங்கத்தால் தற்போது அமெரிக்கா மிக பெரிய பாதிப்பை கண்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்பதே மறந்து ஒரு அரசாங்கம் செயல்படுகிறது. இதுபோன்ற நிர்வாகம் அமெரிக்காவிற்கு பயனற்றதாக இருக்கும் என நினைக்கிறன். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஜீ பிடனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட போகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்