டெல்லியில் 5 பேர் பலி.! மேலும் 381 பேருக்கு கொரோனா.!
தலைநகர் டெல்லியில் மேலும் 381 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் எண்ணிக்கை 6,923 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் பாதிப்பும், உயிரிழப்பும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 62,939 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 2,109 ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைதோர் எண்ணிக்கை 19,358 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 20,228 பாதிக்கப்பட்டு, 779 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பாதிக்கப்பட்ட 20,228 பேரில் 3800 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து குஜராத்தில் 7,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக டெல்லியில் 6542 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனாவுக்கு 73 பேர் பலியாகியுள்ளனர். அங்கு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2020 ஆக உள்ளது.
இந்நிலையில், டெல்லியில் இன்று மேலும் 381 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,923 ஆக அதிகரித்துள்ளது. அதுபோன்று கொரோனா சிகிச்சை பெற்று வந்த 5 பேர் பலியாகியுள்ள நிலையில், அங்கு மொத்தம் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 49 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளார். இதுவரை டெல்லியில் 2,069 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.