இந்தியாவில் கொரோனா பாதிப்பு 63 ஆயிரத்தை நெருங்கியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 63 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் அதனை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதன் விளைவாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது .மூன்றாவது முறையாக ஊரடங்கு மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தினமும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது .
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 63 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,662லிருந்து 62,939 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,981லிருந்து 2,109 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 17,847லிருந்து 19,358 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 20228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பால் 779 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,3800 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்! “இந்தியா” கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் வரை!
February 18, 2025
நள்ளிரவில் தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன்? ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
February 18, 2025
குல்தீப்பா? சக்கரவர்த்தியா? போட்டிக்கு முன் அடித்துக்கொள்ளும் ரோஹித் சர்மா vs கம்பீர்.!
February 18, 2025
பெண்களுக்கென ‘பிங்க் ஆட்டோ’ திட்டம்… எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
February 18, 2025