பிரபலமாவதற்கு என் பெயரை பயன்படுத்துகிறார்கள் -பதிலடி கொடுத்த வாசிம் அக்ரம்
பிரபலமாவதற்கு என் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
அமர் சோகைல் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார்.இவர் சமீபத்தில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமை குறித்து கருத்து ஒன்றை தெரிவித்தார்.அவர் கூறுகையில்,ரமீஸ் ராஜா 1995-ஆம் ஆண்டு கேப்டனாக இருந்தார்.இவருக்கு பின் சலீம் மாலிக் கேப்டனாக இருந்தார்.சலீம் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக இருந்தார்.மேலும் ஒரு வருடம் அவர் கேப்டனாக இருந்திருந்தால் வாசிம் அக்ரமால் கேப்டனாக இருந்திருக்க முடியாது.
2003- ஆம் ஆண்டு வரை என்ன நடந்தது என்று பார்த்தால் ,ஒவ்வொரு உலகக்கோப்பை போட்டிக்கு முன்னாள் கேப்டன்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.1992 -ஆம் ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வெல்லாமல் இருந்த சூழ்நிலையை உருவாக்கியவர் வாசிம் அக்ரம்.1996 ,1999 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் அவர் மட்டும் நேர்மையாக இருந்திருந்தால் பாகிஸ்தான் அணி உலக கோப்பைகளை வென்றிருக்கும்.இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இவரின் கருத்துக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,இதுபோன்ற எதிர்மறையான கருத்துக்கள் வரும்போது கவலையாக உள்ளது.சில வீரர்கள் பிரபலமாவதற்கு என் பெயரை பயன்படுத்துகிறார்கள்.அவர்களுக்கு எதிரான கருத்துகளையும் என்னாலும் உருவாக்க முடியும்.ஆனால் அது என்ன நோக்கத்திற்கு உதவும்.எனவேதான் நான் அமைதியாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.