400க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கி தவிப்பு.! மீட்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் மகாராஷ்டிரா குப்வாட் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூரிய பிரகாசத்தின் ஆட்கொணர்வு மனு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சொந்த ஊருக்கு அனுப்ப ரூ.3,500 செலுத்துமாறு மகாராஷ்டிரா அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மகாராஷ்டிராவில் வேளாண் உற்பத்தி பொருட்கள் குறித்த பணிக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 16 பட்டதாரி பெண்கள் உள்ளிட்ட 35 பேர் கொரோனாவை காரணம்காட்டி பள்ளி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.