#BREAKING : டீ கடைகளை திறக்கலாம் – தமிழக அரசு அனுமதி
தமிழகம் முழுவதும் பார்சல் முறையில் ஈடுபட டீ கடைகளுக்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்த சமயத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.குறிப்பாக டீ கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக அரசு தற்போது புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், வரும் 11ம் தேதி முதல் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) டீ கடைகள் (பார்சல் சேவைக்கு மட்டும்) காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
டீ கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடை பிடிக்க வேண்டும், தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையை சுத்தமாகவும் சுகாதரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ, ஏதும் உட்கொள்ள அனுமதி இல்லை. இதை முறையாக கடைபிடிக்க தவறும் கடைகள் உடனடியாக மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அனுமதி#TNLockDown | #COVID19 | #TNGovt pic.twitter.com/wcKiTgt0NV
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 9, 2020