பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக்குழு – தமிழக அரசு உத்தரவு.!

தமிழகத்தில் இழந்த பொருளாதாரத்தை மேம்படுத்த முன்னாள் ஆளுநர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனவால் அமல்படுத்தப்பட ஊரடங்கு காலத்தில் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் நாடு கடும் பொருளாதார சரிவை கண்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக்குழு அமைத்தது தமிழக அரசு. இதற்காக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து தொழில்துறையினர், வணிகர்கள் உள்ளிட்டோரிடம் உயர்மட்டக்குழு கருத்துக்களை கேட்டறிந்து செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தை சீரமைப்பது குறித்து ஆய்வு செய்து 3 மாத காலத்தில் அரசிடம் அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்மட்டக்குழுக்கு தமிழக உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025